Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து! 20இற்கும் மேற்பட்டோர் காயம்


 மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ரயிலும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அதிகமாக மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மன்னார் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரகின்றனர்.






Post a Comment

0 Comments