Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய இளைஞர் வேலைத்திட்டம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய  இம்  மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று தேசிய இளைஞர் வேலைத்திட்டம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான கிழக்கு கடற்கரையில் தற்போதுள்ள குப்பைகளை அகற்றி , அழகிய சூழலை உருவாக்கவும் இளைஞர் கழக தேசிய சம்மேளனம், மாவட்ட சம்மேளனம் மற்றும்  இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மாதம் 27 ஆம் திகதி சனிக் கிழமை அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, கல்முனை பிரதேச கடற்கரையில் குப்பைகளை அகற்றவும், அழகிய சூழலை உருவாக்கவும்  அம்பாறை மாவட்ட இளைஞர் கழக, விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில் பிரதேசவாசிகளும் இணையவுள்ளதாக அம்பாறை இளைஞர் கழக தேசிய சம்மேளன உறுப்பினர் சிப்னாஸ் அஸீஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments