செ.துஜியந்தன்
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு அமைவாக காணி கோரி விண்ணப்பித்த இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 7ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் முதற்கட்டமாக ஒரு ஏக்கருக்கும் குறைந்த காணி கோரி விண்ணப்பித்திருந்த 1706 பேருக்குமான நேர்முகத் தேர்வுகள் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் அதிகாரிகளினால்
நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments