மட்டக்களப்பு - மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை பொலிஸார் அகற்றியதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
சட்டத்தை மதித்து யாருக்கும் பாதிப்பு இன்றி அகிம்சை ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று வந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸார் இரவோடு இரவாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த பந்தலை அகற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் முறைப்பாடு செய்யச் சென்ற போது “நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் உண்ணாவிரதப் பந்தலை அகற்றியதாக” பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் அகிம்சை ரீதியான ஜனநாயக போராட்டங்களை இலக்கு வைத்து தடைசெய்யும் நிலையில், தென்னிலங்கையில் நடைபெறும் எந்த போராட்டங்களையும் முடக்குவதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை இதுவரை நாடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் எந்த தடை வந்தாலும் தமிழ் மக்களின் நீதிக்காண போராட்டம் தொடரும் என p2p மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடு
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தல் மற்றும் பதாகைகளை அகற்றியமைக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுளள்து.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த போராட்டத்தில்
இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் மற்றும், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.சிவயோகநாதன் மற்றும் வண.பிதா.கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
0 Comments