Advertisement

Responsive Advertisement

பெண்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!



திட்டமிட்டு கொள்ளையடிக்கும் குழுவினரால் அல்லது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் தங்க சங்கிலிகள் கொள்ளையிடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

நேற்று செவ்வாய்கிழமை இவ்வாறு 3 பகுதிகளில் தங்க சங்கிலி கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

அபராதுவ, கட்டுநாயக்க மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு தங்க சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தேகநபர்கள் கடைகளுக்கருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதைப் போன்றும் , யாருக்காகவேனும் காத்திருப்பதைப் போன்றும், பஸ் தரிப்பிடங்களிலும் அல்லது தன்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியும் கொள்ளையடிக்கின்றனர்.

எனவே தனியாக வீதிகளில் செல்லும் பெண்களும், சன நடமாட்டம் குறைவான பிரதேசத்தில் செல்லும் பெண்களும் இவ்விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments