Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிள் ஒன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி முகர்ந்து பார்த்த 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

 


மோட்டார் சைக்கிள் ஒன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி முகர்ந்து  பார்த்த 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளது.


தம்புள்ளை-வெலிமிட்டியாவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறுவன் தனது பாட்டியின் இல்லத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின்  மூடியை கழற்றி முகர்ந்து  பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் மயக்கம் அடைந்ததாகவும்,பின்னர் இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனை கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது பிரேத பரிசோதனைகள் இன்று தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments