Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த (சா/த) பரீட்சை - 2020 ற்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இம்மாதம் 27ம் திகதியில் ஆரம்பமாகவுள்ளது.!

 


கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன.


இதேவேளை சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்ற கோட்டே ஆனந்த பரீட்சை மண்டபத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இந்த வியங்களை குறிப்பிட்டார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நன்றி தெரிவித்தார். இதற்கு சகல அதிகாரிகளும் உயர்ந்தபட்ச ஆதரவை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

Post a Comment

0 Comments