Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை அரசாங்கத்தை குறைந்தபட்சம் முக்கியமான வழக்குகளை விசாரிக்க தூண்டும்! நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள தகவல்கள்

 


உலகளாவிய நியாயதிக்க விதியின் அச்சுறுத்தல் இலங்கை அரசாங்கத்தை குறைந்தபட்சம் முக்கியமான வழக்குகளை விசாரிக்க தூண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நவீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகத்தில் உலகளாவிய நியாயாதிக்க கொள்கைகளின் கீழ் சர்வதேச அல்லது வெளிநாட்டு வழக்குகளுக்கான ஆதாரங்களை சேகரிக்க இலங்கைக்கு ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான மிக சமீபத்திய ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையின் பரிந்துரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பட்டது.

அதற்குப் பதில் வழங்கிய அவர்,

மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர், அவரது சமீபத்திய அறிக்கையில் சர்வதேச நடவடிக்கையை கூட்டாக மேற் கொள்வதற்கு அரசாங்களுக்கு பல பரிந்துரைகளை வழங்குகின்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்காக இலங்கை நிலைமையை பரிந்துரைக்குமாறு பாதுகாப்பு சபைக்கு நேரடியாக கோரிக்கை விடுக்க பொது சபையின் துணை அமைப்பான மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் இல்லை. அத்தகைய பரிந்துரைக்கு ஆதரவு அளிக்குமாறு அறிக்கை தனிப்பட்ட உறுப்பு நாடுகளை கோருகிறது.

ஐநா மனிவுரிமைகளான உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கை, அரசாங்கங்கள் உலகளாவிய நியாயதிக்க வரம்பை பயன்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவுவதற்கு பரிந்துரைக்கின்றது. அதாவது சர்வதேச, பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனப் பொறிமுறை மற்றும் சிரியா, ஈராக்கிற்கான ஐநா பொதுச் சபையும் யுனிடாட் பொறுப்புக்கூறலுக்கான ஜ.நா விசாரனைக்குழு) போன்ற ஒரு அமைப்பு போன்றவற்றை நிறுவ பரிந்துரைக்கின்றது.

உலகளாவிய நியாயதிக்க கொள்கையின் கீழ் அரசுகளின் எதிர்கால விசாரணைகள் அல்லது வழக்குகளுக்கான ஆதரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாப்பதை உறுதி செய்யும். இது சான்றுகளை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான ஒரு படிமுறையாகும்.

அத்துடன் பாதுகாப்பு சபை பரிந்துரை மேற்கொள்ளப்பட்டால் அல்லது ஒரு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ஸ்தாபிக்கப்பட்டால் அல்லது ஒரு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ஸ்தாபித்தால் அல்லது தேசிய வழக்குகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உதவும்.

உலகளாவிய நியாயதிக்க விதியின் அச்சுறுத்தல் இலங்கை அரசாங்கத்தை குறைந்தபட்சம் முக்கியமான வழக்குகளை விசாரிக்க தூண்டும் என்று நம்பப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments