Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கிலுள்ள தீவுகளின் விடயத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா!

 


வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இதை தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை பிராந்தியத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமாக மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்ய முடியுமென சீனா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வட பகுதியிலுள்ள 03 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் அண்மைக்காலமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் போட்டித்தன்மை வெளிப்படுகின்றது.

இலங்கை அரசியல்வாதிகளுள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments