Home » » செல்வி.லக்சியாவின் நிதிப் பங்களிப்பில், மட்டுநகரில் கற்றலுக்கான உதவி வழங்கி வைப்பு!!

செல்வி.லக்சியாவின் நிதிப் பங்களிப்பில், மட்டுநகரில் கற்றலுக்கான உதவி வழங்கி வைப்பு!!

 




சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவு மற்றும் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்சினி தம்மதிகளின் ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக தாயகத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகள் செய்துள்ளனர்.


வவுணதீவு புதுமண்டபத்தடி இருட்டுச்சோலைமடு எனும் கிராமத்தில் பொண்ணாங்கண்ணித் தோட்டத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத "பாரதி முன்பள்ளியை" பொறுப்பெடுத்து, முன்பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் உட்பட முன்பள்ளி மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி, நேற்றையதினம் புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது மீண்டும் புதுப் பொலிவுடன் பாரதி முன்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்திகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு.சண்முகராஜா அவர்கள் கலந்து சிறப்பிக்க, சிறப்பு விருந்தினராக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிழக்கு மாகாணங்களின் பொறுப்பாளர்களில் ஒருவரும், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளரும், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன் என அழைக்கப்படும் திரு.பொன் செல்லத்துரை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு திருமதி தர்சினி குமார் அவர்களின் உறவினரான ஆசிரியர் திரு கனகராஜா தியாகராஜா அவர்களும், அந்தக் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு.கி.நாகமணி அவர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும், முன்பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி முன்பள்ளிக்கான கற்றல் உதவிகளும், செல்வி லக்சியா கிருஷ்ணகுமாரின் "மங்கல மஞ்சல் நன்னீராட்டு விழாவை" முன்னிட்டு சுவிசில் வசிக்கும் கிருஷ்ணகுமார் தர்சினி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் செய்யப்பட்டதாகும். அந்த வகையில் முன்பள்ளியினை சீரமைத்து அதற்குத் தேவையான அலுமாரி, பாடசாலை உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் கற்றலுக்கு தேவையான அனைத்து விதமான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், விசேடமாக விழாவில் கலந்து சிறப்பித்த முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய குழாத்தினர், விருந்தினர்கள், பொதுமக்கள் என சகலருக்குமான விசேட விருந்துணவும் பரிமாறப்பட்டு இனிதாக நிறைவு செய்யப்பட்டது.

ஏற்கனவே மேற்படி திரு.திருமதி. கிருஷ்ணகுமார் தர்ஷினி தம்பதிகளினால் பல்வேறு வகையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகது. அந்த வகையில் தமது ஏகபுத்திரியான செல்வி லக்சியாவின் மங்கல மஞ்சல் நீராட்டு விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், வாழும் பிள்ளையின் சார்பாக வளரும் தென்னம் பிள்ளைகள் ஒரு தொகுதியை வவுனியா மணிப்புரத்தில் உள்ள ஆனந்த இல்லத்தில் வாழும் அன்னையர்களின் எதிர்கால பொருளாதார விருத்திக்காக அமைக்கப்பட்டு வரும் தென்னந் நோட்டத்திற்கு நல்லின தென்னம் பிள்ளைகளும் வழங்கப்படது.

இவ்வாறு தமது ஒரே மகளின் மஞ்சல் நீராட்டு விழாவை "மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக" வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் செயல்படுத்திய திரு திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகளை வாழ்த்துவதோடு, செல்வி லக்சியாவின் எதிர்காலம் சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |