இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: