Home » » கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி பாரதி கெனடி பதவியேற்பு!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி பாரதி கெனடி பதவியேற்பு!

 




கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி.பாரதி கெனடி இன்று (15) திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.


சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு புதிய பணிப்பாளரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுபவேளையில் தனது கடமைகளை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

சமய அனுஸ்டானங்களைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருமலை வளாகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கணகசிங்கம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜீவரைட்ணம் கெனடி, வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. எஸ்.ஜெயராஜ், முன்னால் பதில் பணிப்பாளர் அம்மன் கிளி முருகுதாஸ், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்
பிரதிப் பதிவாளர் திரு.விஜயகுமார் மற்றும் துறைத் தலைவர்கள், பல்கழைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், பணிப்பாளரின் குடும்பத்தினர் மற்றும் மாணவர்களென பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகளும், அதிதிகளின் விசேட உரைகளும் அரங்கை அலங்கரித்தன. அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தின் பயன்தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள கலாநிதி.பாரதி கெனடி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிவந்த நிலையில் பல்கழக மானிய ஆணைக்குழுவினால் குறித்த நிறுவனத்தின் நான்காவது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |