Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா


இளங்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின் எதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் மூத்த கவிஞர மு.சடாட்சரன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.















இந் நிகழ்வில்; கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அதிதிகளாக கலந்து கொண்டனர். இங்கு நூலாசிரியர் அறிமுகத்தினை ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம், நூல் சிறப்புரையினை எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம் ஆகியோர் நிகழ்த்தினார்கள். நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் சகோதரர், ஓய்வு நிலை அதிபர் மு.சுபைந்திரராஜா பெற்றுக்கொண்டார்.
எதிரியையும் ஜெயிக்கலாம் நூலாசிரியர் அகரம் செ.துஜியந்தன் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments