தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது திருகோணமலைப் பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
திருகோணமலை - மடத்தடிச் சந்திப் பகுதியில் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், பேரணியில் பொலிஸார் கலந்துகொண்டிருந்த போதும் தாக்குத்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், இத் தாக்குதலில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
0 comments: