தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2021) மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பயிற்சி நெறியை மேற்கொண்ட அரச உத்தியோகத்தர்களின் சிங்கள மொழிமூல கலை நிகழ்வுகள் நடைப்பெற்றதோடு பயிற்சியை வழங்கிய வளவாளர்களான V. சபேசன், N. சுப்பிரமணியம், N.சிறி நிரஞ்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுகத்தின் இணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments: