Advertisement

Responsive Advertisement

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி

 


செ.துஜியந்தன் 


கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சாதாரண தினக்கூலியாக பணியாற்றிய  ஒருவர் மின்சாரம் தாக்கி ஒருகையை இழந்த நிலையில் வறுமையில் வாடும் அந்நபரின் குடும்பத்தினருக்கு சமத்துவ நல மக்கள் ஒன்றியம் அவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கிவைத்துள்ளது.

சமத்துவ நல மக்கள் ஒன்றியத்தின் மட்டு- அம்பாரை இணைப்பாளர் எஸ் சசிகாந்தன் தலைமையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவியின் போது கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஆர்.முரளிஸ்வரன் கலந்து கொண்டார்.

சமத்துவ மக்கள் நல ஒன்றியமானது மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு கல்வி, வாழ்வாதார உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றது. இதற்கமைய மின்னாசரம் தாக்கி உடல்நிலை செயலிழந்துள்ள குறித்த குடும்பத்தினருக்கான உதவிகளையும், வாழ்வாதர வசதிகளையும்  எதிர்வரும் காலங்களில் வழங்கியுள்ளதாக  ஒன்றியப்  பிரதிநிதி எஸ்.சசிகாந்தன் தெரிவித்தார்.                                             

Post a Comment

0 Comments