Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவ தலைவர்ளுக்கு சின்னம் சூட்டுதல்


 (செ. துஜியந்தன் )


 பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு  மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு  வித்தியால அதிபர் எஸ்.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

ஒரு பாடசாலையின் வளர்ச்சியிலும் ஒழுக்கத்திலும் அதிபர், ஆசிரியர்களுக்கு அடுத்ததாக முன் மாதிரியான  மாணவர்களாக மாணவத் தலைவர்கள் உள்ளனர். பாடசாலையில் உள்ள ஏனைய மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும் மாணவத் தலைவர்கள் சிறந்து விளங்கவேண்டும்.

நேரமுகாமைத்துவத்தையும், பாடசாலை சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து பாடசாலைக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மாணவத் தலைவர்கள் பாடுபடவேண்டும் என வித்தியாலய அதிபர் எஸ்.கணேஸ்வரன் தெரிவித்தார்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியலாயமானது கல்வியிலும், இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கும் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments