Advertisement

Responsive Advertisement

சிறுவர் வைத்தியசாலையில் 150க்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளுக்கு கொரோனா தொற்று!!

 


கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்


இதேவேளை, தொற்றுக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர் சுமார் நூறுபேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது சமூக ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு லேடிரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 18 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments