ஜா-எல ஆதார வைத்தியசாலையில் சுயமாக பி.சீ.ஆர். பாிசோதனையை மேற்கொண்ட ஜா-எல ராகம அரச பேருந்தொன்றில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தொிய வந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று (05) குறித்த பேருந்தின் சாரதி மற்றும் அப்பேருந்து தாிப்பு நிலையத்தைச் சேர்ந்த 153 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் சுகாதார பாிசோதகர் தனஞ்சய ஹேரத் தொிவித்துள்ளார்.
இன்றைய தினம் இத்தொற்றாளருடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடந்த ஜனவாி முதலாம் (01) திகதி முதல் அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் மக்கள் சுகாதாரப் பாிசோதகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments