செ.துஜியந்தன்
இன்று களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான அன்டிஜன் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பலர் விடுமுறையில் வீடு சென்று விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இவ்வாறு வெளிமாவட்டங்களுக்குச் சென்றுவந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டபின் அன்டிஜன் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் வழமைபோன்று கடமைக்குத் திரும்பியுள்ளனர். களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் இதுவரை 1463 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments