Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அத்துமீறி சிங்கள குடியேற்றம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேற்றம் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 காணிகள் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு மேச்சல்தரையை அபகரிப்பது தொடர்பாக இன்று (20) கொக்கட்டிச்சோலையில் இருந்து பட்டிப்பளை வரையும் பேரணியாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்று பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments