தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக சில நாட்களே உள்ள நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக் கொண்ட டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளார். தான் படித்த புத்தகங்கள், உடமைகளை அவரின் உதவியாளர்கள் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை வரலாற்று மைய அதிகாரிகள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒவ்வொரு அதிபரும் பதவியிலிருக்கும் போது, கொண்டு வரும் பொருட்கள் கணக்கிடப்படும் என்றும், தற்போது டிரம்ப் எடுத்துச் செல்லும் பொருட்களும் கணக்கிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
0 comments: