Home » , » முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மூன்று மாதம் கொடுப்பனவு வழங்கப்படவில்லை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மூன்று மாதம் கொடுப்பனவு வழங்கப்படவில்லை

 


செ.துஜியந்தன்


கிழக்கில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்கப்படும் 4ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவு மூன்று மாதங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை. இதனால் அக் கொடுப்பனவை நம்பி வாழ்வாதாரத்தை நடத்திவரும் முன்பள்ளி ஆசிரியைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை முன்பள்ளி ஆசிரியைகளுக்கு நிலுவையில் வழங்கப்படாதுள்ள மூன்று மாதக்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்பள்ளி ஆசிரியைகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் கீலுள்ள பாலர்பாடசாலைகளின் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக 4 அயிரம் கொடுப்பனவு வழங்கப்படாதுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 17 கல்வி வலயங்களிலும் 1681 பாலர் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 3780 ஆசிரியைகள் அர்ப்பணிப்பான சேவையாற்றிவருகின்றனர். சேவை மனப்பாங்குடன் பல ஆண்டுகளாக பாலர் பாடசாலைகளை நடத்திவரும் ஆசியைகள் பலர் வறுமை நிலையிலுள்ளவர்கள். 
இவர்களுக்கான கொடுப்பனவு கூட முறையாக மாதாந்தம் வழங்கப்படாதுள்ளது. 

தற்போது கொரோனா தொற்றாலும், மழை வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு வறுமையின் உச்சத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இச் சிறிய கொடுப்பனவையாவது முறையாக மாதாந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கிராமங்களில் முன்பள்ளிகளை நடத்திவரும் சமூக அமைப்புக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |