இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
இதில் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும் வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவரும் மற்றும் ஓபநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments