கேகாலை மாவட்டத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு அதிக காய்ச்சல் நிலைமை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான நிலைமை இல்லை என சுட்டிக்காட்டிய அவர், இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிற்குள் கொரோனா வைரஸின் புதிய வீரியம் கொண்ட வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோருகின்றார்.
கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மாதிரிகளை, இரசாயண பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments