சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக இலங்கையின் பல மாவட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் இந்த வாரம் முழுவதிலும் நாடுதழுவியதாக நடைபெற்றது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிய 30 ஆயிரம் முகக்கவசங்களை நாடுமுழுவதிலுமுள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் உறுப்பினர்களின் உதவியுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சந்தைகள், பாதுகாப்பு படை வீரர்கள் என பலருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments