Home » » பெரியநீலாவணையில் விசேட பிரார்த்தனை

பெரியநீலாவணையில் விசேட பிரார்த்தனை

 


செ.துஜியந்தன் 
 
பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சசித்திவிநாயகர் ஆலயத்தில்  கொரோனா தொற்றிருநது மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட  பிரார்த்தனை வழிபாடு      இடம்பெற்றது 

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்களுக்கும்   உலகெங்கும் வாழும்  மக்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக  ஆசி வேண்டி  ஆலையடி ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலயத்தில்  ஆலயபரிபாலனசபையின்  ஒத்துழைப்புடன்  ஆலய பிரதமகுரு  குரு சிவஸ்ரீ விஜயவர்மன் குருக்கள், கிரியா குரு  சிவஸ்ரீ கிருஷ்ஜெகேந்திரக்குருக்கள் தலமையில்  காலை 06.00மணிக்கு    இடம்பெற்றது
அம்பாறை மாவட்ட கலாசார  உத்தியோகத்தர் கே.ஜெயராஜி ஒழுங்கமைப்பில் நடைபெற்ற 
இந்நிகழ்வில்  ஆலய தர்மகர்தாக்கள். நிர்வாகசபை  உறுப்பினர்கள் கலந்து  கொண்டதுடன்

இப்பிராத்தனை நிகழ்வானது  6.30 மணிக்கு  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் "ஆலயதரிசனம்" நிகழ்வில்  ஒலிபரப்பு  செய்யப்பட்டது  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |