செ.துஜியந்தன்
கல்முனை வடக்கில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கான மருந்து விநியோகிக்கு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதற்கான மருந்துப்பொருட்கள் கல்முனை வடக்கு நிர்வாக உத்தியோகத்தர் ஜீவராஜா, உதவிதிட்டமிடல்பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன் ஆகியோர் மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளனர்.
கல்முனை வைத்தியசாலைகளில் மாதாந்தம் தொடர்ச்சியாக நடைபெறும் விசேட சிகிச்சைகளுக்காச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்துகள் அனுப்பப்பட்டுவருகின்றன. தபால் மூலம் சென்றடையாத மருந்துப்பொருட்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது கல்முனையின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதினால் அங்குள்ள நோயாளிகளுக்கான மாதாந்த மருந்துப்பொருட்கள் கல்முனை வடக்கில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: