2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரிகள் இன்று முதல் அமுலாவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
தனிப்பட்ட நபர்களின் வருமானம் தொடர்பிலான வரி இன்றைய தினம் முதல் அமுலாகின்றது.
கடந்த காலங்களில் தனி நபரின் வருமானம் ஒரு லட்சம் ரூபாவாக இருந்தால் வரி அறவீடு செய்யப்பட்டது தற்பொழுது இந்த வருமான எல்லை இரண்டரை லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சேமிப்பு வைப்புக்கள் தொடர்பில் அறவீடு செய்யப்பட்டு வந்த 5 வீத வரி இன்றுடன் ரத்தாகின்றது.
பெறுமதி சேர் வரி தொடர்பிலான வரவு செலவுத்திட்ட யோசனையும் இன்றைய தினம் முதல் அமுலாகின்றது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments: