Advertisement

Responsive Advertisement

மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

 


இலங்கையின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவங்கள் கும்பலாக இணைந்து மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments