மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (14) மாலை இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களில் ஒருவர் மரணித்துள்ளதுடன் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
களுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்…களுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.
இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
எருவில் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தபோது களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இதன்போது அருகருகே இருந்த இருகடைகளின் முன்பகுதி உடைபட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் கடைக்கு பொருட்கொள்வனவிற்காக வருகை தந்துள்ள ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்தவர்கள், உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் இதில்காயமுற்ற 4 பேரும் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதையுடைய காரைதீவைச்சேர்ந்த களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் திருமணம் முடித்துள்ளவரெனவும், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் அரச அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வேன். அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென களுதாவளை பிரதான வீதியில் வைத்து குறுக்கீடு செய்ததில் விபத்து சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது, இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் களூவஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க பட்டிருப்பு உள்வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து களூவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, களுதாவளை கடற்கரை வீதியிலும் முச்சக்கர வண்டி ஒன்று தடம்புரண்டதிலும் ஒருவர் படுகாயமடைந்த மேற்படி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தைப்பொங்கல் தினமாக வியாழக்கிழமை (14) மாலை களுவாஞ்சிகுடி பகுதிக்குள் 4 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments: