மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு தொற்றுள்ளமை இன்று (புதன்கிழமை) அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் மேற்கொள்ளப்ப்ட்ட 132 பிசிஆர் பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேர் உட்பட 12 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமையினால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
0 comments: