Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் பாரிய வெற்றி- சுற்றுலா பயணிகளின் வருகையால் 42 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம்!!

 உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்ட நிலையில் இலங்கையின் சுற்றுலா துறையானது மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.



இதனையடுத்து, கடந்த மூன்று வாரகாலமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் பாரிய வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று வார காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500இற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மூலம் 22 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 9 விமானங்களில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் 1500க்கும் அதிகமானோர் இலங்கை வந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்களில் ஒரு பகுதியினர் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பி சென்றுள்ளனரர். அவர்கள் குறைந்தபட்சம் 10 நாட்கள் நாட்டில் தங்கியிருந்தனர்.

அவர்கள் ஹோட்டல் அறைக்காக நாள் ஒன்றுக்கு 125 - 150 டொலர் செலவிட்டுள்ளனர். அதற்கு மேலதிகமாக வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்யும் போது 100 டொலருக்கு மேலதிகமாக ஒரே தடவையில் செலவிட்டுள்ளனர்.

அதற்கமைய அந்த சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு கிடைத்த 42 கோடி ரூபாயை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments