ரீ.எல்.ஜவ்பர்கான்)இந்திய அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் இன்று(29) ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3400 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாளை சனிக்கிழமை ஆரம்பமாவதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் உட்பட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமை புரியும் வைத்தியர்கள் சுகாதார ஊழியர்களுக்கு இத்தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக்கப்பட்ட பல பிரிவுகள் அடங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 573 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments