மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேரும்,காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும்,செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒரு காவற்துறை அதிகாரியும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் இதுவரை 491 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 226 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: