இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று மேலும் 522 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இலங்கையில் மேலும் 761 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 726 ஆக காணப்படுகின்றது.
தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 6 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 641 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
0 Comments