Home » » கிழக்கு மாகாணத்தில் 12 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிழக்கு மாகாணத்தில் 12 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 


கிழக்கு மாகாணத்தில் 12 மணிநேரத்தில் 85பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 85 என்ற தொற்றுக்களில் கூடுதலாக காத்தான்குடியில் 46 தொற்றுக்களும் கல்முனை தெற்கில் 14தொற்றுக்களும் இனங்காணப்பட்டன.

இத்தரவுகளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாகி வருகின்றது. அங்கு நேற்றுவரை 1,188 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

கடந்த மார்ச் மாதமிருந்து இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 204 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 803 பேரும் திருமலை மாவட்டத்தில் 142 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 39 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 803 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

கல்முனை தெற்கில் 185 பேரும் காத்தான்குடியில் திடீரென 66பேரும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிலைமை மோசமாகியது.

இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு மற்றும் காத்தான்குடியில் 06 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனைப் பிராந்தியத்தில் 804ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 763 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 306, அடுத்ததாக கல்முனை தெற்கு 185 தொற்றுக்கள், பொத்துவில் 74, அட்டாளைச்சேனை 70, சாய்ந்தமருது 36, ஆலையடிவேம்பு 31, இறக்காமம் 23, சம்மாந்துறை 17, கல்முனைவடக்கு 15, திருக்கோவில் 14, நிந்தவூர் 13, காரைதீவு 11 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 66 பேரும் கோறளைப்பற்றில் 61 பேரும் களுவாஞ்சிக்குடியில் 21பேரும் ஏறாவூரில் 16 பேரும் மட்டக்களப்பில் 14பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 64பேரும் மூதூரில் 41பேரும் கிண்ணியாவில் 11பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனா தொற்றாளர்கள் 39பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 803பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிழக்கில் கொரோனா காரணமாக 19714பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதமிருந்து இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 6065 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 6179 பேரும் திருமலை மாவட்டத்தில் 4303 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 3167 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |