Advertisement

Responsive Advertisement

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி- 100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்க முடியாது...!!

 


இலங்கையில் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றி மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

வகுப்புக்களில் உள்ள ஆசனங்களில் 50 வீதமான ஆசனங்களில் மாத்திரம் அமரக்கூடிய வகையில் மேலதிக வகுப்புக்களை நடத்தவேண்டும். இருப்பினும் 100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திற்கு மாத்திரமே மேலதிக வகுப்புக்களை நடத்துமாறும் சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments