Home » » அக்கரைப்பற்றை நாளை தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளோம்

அக்கரைப்பற்றை நாளை தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளோம்

 


வரதன் ) 

அக்கரைப்பற்று உப கொத்தணியில் கொரோனா குறைந்து வருவதால் அப்பகுதியை நாளை தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளோம் என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார் . 

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய கொரொனா நிலவரத்தின்படி 994 பேர் கொரொனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் கடந்த 12 மணித்தியாலத்தில் கிண்ணியா மூதூர் திருகோணமலை சாய்ந்தமருது அட்டாளைச்சேனை பொத்துவில் காத்தான்குடி அம்பாறை போன்ற பிரதேசங்களில் இருந்து மொத்தமாக 30 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 2268 நபர்கள் சிகிச்சை பெற்றுவருவதோடு 1763 நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதமானது படிப்படியாக அதிகரித்துவருகிறது. அக்கரைப்பற்று உப கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதனால் அப் பிரதேசத்தை நாம் தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கல்முனைப் பிரதேசத்தில் எமக்கு பிசிஆர் எடுப்பதில் ஏற்பட்ட பின்வாங்கல் காரணமாக அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். 

மட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியில் தொற்று ஏற்பட்ட 16 நபர்களில் 12 நபர்களுக்கு கொரோனா வைத்தியசாலைகளை அணுக முடியாத காரணத்தினால் எமது சுகாதார திணைக்களம் மூலமாக அவரை பராமரித்துவருகிறோம். 

திருகோணமலையில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மவட்ட செயலாளர் பாதுகாப்பு படையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள் மூதூரில் தொற்றுக்குள்ளான 6 பேரில் எமது வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கொவிட் தொற்று மேலும் பரவாமல் இருக்க நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |