இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், கடந்த 21 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் இரத்தம் விசமடைதல், புற்றுநோய் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 579 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இரண்டாவது கொரோனா அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 882 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 536 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்காலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 573 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 11 இலட்சத்து 38 ஆயிரத்து 766 பி.சி.ஆர். பரிசோதானை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: