எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது உடனடியாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் கூறியுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றும் பாடசாலைகளுக்கான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கென அரசாங்கம் ஆயிரத்து 50 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: