திருகோணமலை மாவட்டத்தின் நகரை அண்டிய பிரதேசத்தில் இன்று(20) 15 பேர் கொவிட் வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
அதன்படி கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலிற்கமைய திருகோணமலை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை முற்றாக கடைப்பிடித்தல் இன்றியமையாதது.முகக் கவசம் அணிதல் , சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவுதல், அனாவசிய பயணங்களை தவிர்த்தல் என்பனவற்றை கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments