கடந்த நவம்பர் மாதம் மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்குள்ளானவருக்கான முற்பண கொடுப்பனவாக 10,000/- க்கான காசோலை காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது. மின்னல் தாக்கத்தினால் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் இவ்வாறு ஐந்து வீடுகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.சாருன் மற்றும் காரைதீவு 8ம் பிரிவு கிராம உத்தியோகத்தர்வீ. ஜெகதாஸ் போன்றோர் கலந்துகொண்டார்கள்.
0 comments: