எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பொறுப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 வருடங்களாக தென் ஆபிரிக்க நிறுவனம் ஒன்று சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிட்டு வந்த நிலையில், அந் நிறுவனத்துடனான ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தினர் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
ஒரு மாதத்தில் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படும் நிலையில், இராணுவத்தினர் அப்பணியை முன்னெடுப்பதன் ஊடாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட பாரிய தொகை பணம் சேமிப்பாகும் என அவர் கூறினார்.
0 Comments