மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய விடுதி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் எவருக்கும் எந்த ஆபத்துக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக இன்று காலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது.
காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளநிலையில் அதனை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு நகர் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய விடுதி பகுதியில் உள்ள மரம் முறிந்து விழுந்துள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் எந்த அனர்த்தங்களும் ஏற்படாத நிலையில் முறிந்து விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியுடன், மாநகர சபை ஊழியர்கள், பொலிஸார் இணைந்து அகற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
0 comments: