Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 36544ஆக அதிகரிப்பு!

 


இலங்கையில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 491 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக காணப்படுகின்றது.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 827 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 517 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments