காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இன்று (14) நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது சிறுவன், ஐந்து ஆண்கள் மற்றும் 11 பெண்கள் அடங்குவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஏழு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 72 ஆக அதிகரித்துள்ளது.
டெடுகோடா வடக்கு, டெடுகோடா தெற்கு, டங்கேதரா கிழக்கு, மகுலுவா, தலபிட்டியா, மிலிடுவா மற்றும் கொங்கஹா கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி கல்வி பிரிவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 18 ஆம் திகதி வரை மூட தெற்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
0 Comments