Advertisement

Responsive Advertisement

கிழக்கில் 1058ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்- கடந்த 12 மணி நேரத்தில் 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...!!

 


கடந்த 12 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1058ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று திடீர் என மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 200 பேரில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காத்தான்குடியில் செய்யப்பட்ட 13 அன்டிஜன் பரிசோதனையில் 4பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் திருகோணமலையில் உள்ள கோமணங்கடவல பகுதியில் ஒருவருக்கும், கல்முனை வடக்கு சுகாதார அதிகாரி பிரிவில் மூன்று பேருக்கும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 நபர்களுக்கும், சாய்ந்தமருது பகுதியில் ஒருவருக்கும், காரைதீவில் ஒருவருக்கும், சம்மாந்துறையில் ஒருவருக்கும், வெல்லாவெளியில் ஒருவருக்கும், ஆரையம்பதியில் ஒருவருக்கும், அம்பாறையின் தமன்ன பகுதியில் ஒருவருக்குமாக மொத்தமாக 41 பேருக்கு கொரோனா தொற்று ஊறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் 126 பேருக்கும், மட்டக்களப்பில் 138 பேருக்கும், அம்பாறையில் 26 பேருக்கும், கல்முனை பிராந்தியத்தில் 768 பேருக்குமாக மொத்தம் 1058 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், கல்முனையில் சில கிராம சேவக பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மக்கள் சரியான முறையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், சமூக மற்றும் தனிநபர் இடைவெளியை பேணா வேண்டும் என்றும், தேவையின்றி வெளியில் செல்வத்தை இயலுமானவரை குறைக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments