Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு!!

 


திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் ஐவர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் திருகோணமலை நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, திருகோணமலை நகரில் 66 பேரும், மூதூரில் 32 பேரும் கிண்ணியாவில் எட்டுப் பேரும் தம்பலகாமன் பகுதியில் ஆறு பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், சேருவில பகுதியில் மூவருக்கும் கோமரங்கடவல மற்றும் குச்சவெளி பகுதிகளில் தலா ஒவ்வொருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments