மட்டக்களப்பு - புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து குணமடைந்து வெளியேறிய தொற்றாளர்கள் குறித்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் காணப்பட்ட சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் வாழைச்சேனை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி குறித்த மத்திய நிலையத்திலிருந்து வெளியேறியவர்களில் நால்வரே இவ்வாறு அங்கிருந்து பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர் என ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கொழும்பு 02 பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு, ஒருவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் ஆவார் எனவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments: